பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
ஆழ்வார் திருவரங்கநாதனை எழுப்பு, உன்னுடைய அடியார்க்கு அடியனாய் என்னை ஆட்படுத்தி அருள வேண்டும் என்கிறார்.

இலக்கணம்: எண்சீர்க்கழிநெடியாசிரிய விருத்தம் - ராகம்: பூபாள - தாளம்: அட

மூலம்: 10. கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே

திருவரங்கம் | ஸ்ரீரங்கநாதன் | கமலங்கள் | தாமரை | சூரியன் | கடல் | திருத்துழாய் | கூடை | தொண்டரடிப்பொடியாழ்!வார் |