பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
சூரியன் கிழக்கில் உதித்ததையும், தேவர்கள் தங்கள் வாஹனங்களில உன்னை எழுப்ப வந்துள்ளனர் என்று ஆழ்வார் அரங்கனை பள்ளி எளுப்புகிறார்.

இலக்கணம்: எண்சீர்க்கழிநெடியாசிரிய விருத்தம் - ராகம்: பூபாள - தாளம்: அட

மூலம்: 1. கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

திருவரங்கம் | ஸ்ரீரங்கநாதன் | பள்ளி எழுந்தருளாயே | சூரியன் | கிழக்கு | தேன் | தேவர்கள் | அரசர்கள் | தெற்கு | களிறு | பிடி | முரசு | கடல் |